சூரப்பா வழக்கு தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை : ஆணைய அதிகாரி கலையரசன்

சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை என ஆணைய அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற…

சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான விசாரணைக் குழுவுக்கு கால நீட்டிப்பு தேவையில்லை என ஆணைய அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சூரப்பா ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் மீதான விசாரணை தினந்தோறும் நடைபெற்று வருவதாகவும், அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விசாரணை அதிகாரி கலையரசன் தெரிவித்துள்ளார்.

தனது தரப்பு விளக்கத்தை அளிக்க சூரப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த நீதிபதி கலையரசன், விரைவில் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் மே மாத இறுதி வரை இருக்கும் நிலையில், மேலும் கால நீட்டிப்பு செய்ய தேவையில்லை என ஆணைய அதிகாரி கலையரசன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.