செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்தன்.இவருடைய மனைவி சகுந்தலா,கணவன்,மனைவி இருவரும் அப்பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.வசந்தன் திருப்போரூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் வசந்தனும்,சகுந்தலாவும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கழிப்பறை பகுதியில் தங்கி விட்டனர். நேற்று மதியம் வீட்டிற்கு இருவரும் திரும்பி வந்தனர்.அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தப்போது பீரோ,லாக்கர் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு உள்ளிருந்த துணிகள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 சவரன் தங்க நகைகள்,50 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை திருடு போய் உள்ளன.மேலும் திருட்டு சம்பவத்தை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடிகளை திருடர்கள் தூவி சென்றுள்ளனர்.

திருட்டு சம்பவம் தொடர்பாக வசந்தன் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரையடுத்து வழக்கப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.