செங்கல்பட்டு : 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் நல்லாமூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லாமூர் கிராம மலையடிவாரத்தில் எட்டு இருளர் இன குடும்பங்கள்…

செங்கல்பட்டு மாவட்டம் நல்லாமூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லாமூர் கிராம மலையடிவாரத்தில் எட்டு இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் குடிநீர், மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி 30 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.

தேர்தல் வரும் போதெல்லாம் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக கூறி ஓட்டு வாங்கிச் செல்லும் அரசியல்வாதிகள், தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் இதுவரை செய்து தரவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள் : அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

எல்லோருக்கும் கிடைக்கின்ற அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில்லை என்றும், கடந்த ஓராண்டுக்கு முன்னர் அரசால் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டும், அதற்கான உரிய இடம் இதுவரை அளந்து தரப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர், மின்சாரம், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.