மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!

மதுராந்தகம் சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும்.…

மதுராந்தகம் சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் உற்சவ விழா வெகு சிறப்பு வாய்ந்ததாகும்.

அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது. காலையில் அப்பகுதியை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி ஊரணி பொங்கல் வைத்து அதனை அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். மேலும் இரவில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடு,கோழிகளை பலியிட்டும் வேண்டுதலை நிறைவேற்றினர்.திருவிழாவை முன்னிட்டு பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.