உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் அமெரிக்க திரைப்பட விழாவில் 2 விருதுகளை வென்றது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காக பெரிதும் பாராட்டுகளை பெற்றது.








