முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்

மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும்,…

மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும், அவரது நண்பர் ஆட்சியும் கோட்டைப்புஞ்சை பகுதிக்கு, நாட்டுத் துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர். நள்ளிரவில் வனப்பகுதியில் அவர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த, அதே பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ், சதீஷ், அஜித் ஆகியோர், முத்துவிடமிருந்த வேட்டையாடிய முயலை கேட்டுள்ளனர்.

ஆனால், முத்து முயலை தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மோகன்தாஸ், முத்துவிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பிடுங்கி அவரை சுட்டுள்ளார். முத்து படுகாயமடைந்த நிலையில், மோகன்தாஸ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். முத்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தப்பியோடிய மோகன் தாஸ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.