முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற பாஜகவிற்கு அக்கறை இல்லை: நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் வளர்ச்சியை காண முடியும். மாநில அந்தஸ்து பெற கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசு பட்ட தொல்லைகள் எல்லாம் மக்களுக்குத் தெரியும் என்றும் மாநில அந்தஸ்து தான் புதுச்சேரி மக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் காக்க கூடிய கவசம். ஆனால் பிரதமரை சந்தித்த சபாநாயகர், பாஜக தலைவர், அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்கள் மாநில அந்தஸ்து தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதிலிருந்தே மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவிற்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் ஹெல்மெட் அணியாதவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற உத்தரவை புதுச்சேரி அரசு ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேளாண் பட்ஜெட்: பச்சை துண்டு அணிந்து வந்த பாமகவினர்

Janani

ரூ.1.15 கோடி மதிப்புடைய போதைப்பொருட்கள் பறிமுதல்

Vandhana

வெளியாவதற்கு முன்பே பிரின்ஸ் படம் செய்த வசூல் சாதனை!

EZHILARASAN D