சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் ராசாத்தி அம்மாள்

ஜெர்மனிக்கு சிகிச்சை பெறச் சென்ற ராசாத்தி அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவியாரான ராசாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் தமது மகள் கனிமொழியுடன்…

ஜெர்மனிக்கு சிகிச்சை பெறச் சென்ற ராசாத்தி அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவியாரான ராசாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் தமது மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாகவே ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாகத் தெரிகிறது. அதுவும் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ராசாத்தி அம்மாளுக்கு அவ்வபோது உடல்நிலை கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வயிற்று வலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ஜெர்மனியில் உள்ள பிரபல ஃபோர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அப்பல்லோ மருத்துவர்கள் அண்மையில் பரிந்துரைத்தனர்.

இதற்காக ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த மாதம் 25ஆம் தேதி தன் மகள் கனிமொழி உடன் சென்றார். சிகிச்சை முடிந்து இன்று காலை ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் சென்னை திரும்பினார். அவருடன் கனிமொழியின் மகனும் இருந்தார். விமான நிலையத்தில் அவர்களை டி.ஆர்.பாலு வரவேற்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.