காலை உணவுத் திட்டம் – செப்.15இல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15இல் மதுரையில் தொடங்கி வைக்கிறார். அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையோட்டி, மதுரை, நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த…

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15இல் மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையோட்டி, மதுரை, நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த பின்னர் முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 லட்சத்து 14,095 மாணவா்களுக்கு ரூபாய் 33 கோடி 56 லட்சத்தில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாட்டிலேயே முன்னோடியாக “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்று வழங்கப்பட உள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் அளிக்கப்படும்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.