பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பழனி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மாரியம்மன் நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாரியம்மன் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் திருதேர் ஊர்வலம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவிற்க்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டது.
—அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: