சீர்காழி தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளின் பல்வேறு படைப்புகளைக் காட்சிப்படுத்திய உணவு திருவிழா நடைபெற்றது.
சீர்காழியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் படைப்புகள் கண்காட்சிகளாகக் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் பண்டையக் காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தப் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் தானிய வகைகளைத் தங்கள் பெற்றோர் உதவியுடன் கொண்டு வந்து, அதன் மூலம் கிடைக்கும் பயன்களை தற்போது உள்ள இளையத் தலைமுறை மாணவர்களுக்கு இளம் மாணவ மாணவிகள் எடுத்துரைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர்,சேர சோழ, பாண்டிய மன்னர்களின் வேடமணிந்து அவர்கள் ஆட்சி புரிந்த விதம் குறித்தும் விளக்கியப் பின்னர், கணிதமேதை ராமானுஜர், பாரதியார், பாரதிதாசன், வரதராசன், வள்ளலார் ஆகியோரின் உருவங்களை வேடமிட்டும் அவர்கள் அசத்தினர்.
-ரூபி