தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்…

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, தேனி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி மற்றும் கோவையில் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.