யாயா , பக்ரீத் திரைப்படங்களை தொடர்ந்து எம் 10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ் முருகராஜ் தயாரிக்கும் திரைப்படம் சிங்னேச்சர். முதல் இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் எம். எஸ் முருகராஜ் தயாரிக்கும் திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் நட்டி மற்றும் ஜீவன் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தில் இளவரசு, ஹரிஸ் பெராடி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைபடத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது எனவும் திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் யூனிவெர்சிட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜீவன் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ-எண்ட்ரீ கொடுத்துள்ளார்.
கைநாட்டை பயன்படுத்தி ஜீவன் மற்றும் நட்டி செய்யும் சீட்டிங் பற்றி கூறுவதே திரைப்படத்தின் கதை. மக்களோடு பழகி சாமானிய மக்களின் டேட்டவை திருடும் கேரக்டரில் ஜீவனும், அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவராக நடிகர் நட்டியும் நடிக்கிறார். கை நாட்டை பயன்படுத்தி நடக்கும் மோசடியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதாக படம் அமையும் எனவும் படகுழுவினர் தெரிவித்தனர்.







