கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
மேலும் நேற்று பெய்த கனமழையால் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு என்ற இடத்தில் தார் சாலை சரிந்ததால் போக்குவரத்து துண்டிக்கபட்டது இதனால் பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு செல்ல அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பு இதனால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து கொடைக்கானலுக்கு வத்தலகுண்டு சாலை வழியாக வர மாவட்ட நிர்வாகம்
அறிவுறித்தனர். கொடைக்கானலில் இருந்து வில்பட்டிக்கு செல்லும் சாலையில் இரவு சுற்றுலா பயணியின் கார் மீது மின்கம்பம் விழுந்ததில் கார் முற்றிலும் சேதமடைந்தது
மேலும் அதிர்ஷ்ட வசமாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.