அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இன்று (நவ.29) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இன்று (நவ.29) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது.  இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.  மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு,  அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.

தெற்கு இலங்கை, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாமக்கல் ,சேலம், விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.