தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2 -ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ்அளவில் இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 34-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ்அளவில் இருக்கக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆகிய இடங்களில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.