அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக…

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து,  அதிகபட்ச வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.  இதனிடையே கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அந்த வகையில் சில இடங்களில் கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் அளவு குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசி வந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று அதிகாலை 3 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. அத்துடன் இன்னும் 3 மணி நேரத்திற்கு இதே போல் வானிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.