தமிழ் நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




