சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. இதில் 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய், மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்..

இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அடுத்து, நவம்பர் மாதம் மழைக்கால கூட்டத் தொடர் சுமார் 3 நாட்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.