சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




