மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியில் இன்று வெளியாகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாதக என 5 முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த செப்.9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மனுக்கல் மீதான பரிசீலனை 17-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத்,, சிபிஐஎம் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 28 பேரின் வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 22 பேரின் வேட்புமனுக்கள் எற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றே மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.