திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் திமுக முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. இதில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி முன்னதாக 2026-ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்.15-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் செப்.19-ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இந்த் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலையத்தில் உள்ள கலைஞர் அறங்கில் நடைபெற உள்ளது.
விருதுகள்:
பெரியார் விருது – விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
அண்ணா விருது – சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே. சுபாஷ்
கலைஞர் விருது – கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
பாவேந்தர் விருது – கழக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
பேராசிரியர் விருது – தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது – இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா




