தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று, ஜூலை 21, 2025) ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரக்கூடும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதும், மேற்கு திசைக் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதும் இந்த கனமழைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.







