தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே மாதா கோவில் கெபி ஒன்று உள்ளது. இந்த கெபியில் நாள்தோறும் ஏராளமான பொது மக்கள் வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு அந்த கெபிக்கு வந்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருட முயற்சி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அந்த திருடர்கள் கவனித்து கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த கேமரா இருக்கும் இடத்தின் அருகே அந்த திருடர்கள் நடனமாடியவாறு கேமராவை பார்த்து நக்கல் அடித்தனர்.
தற்போது இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் திசையன்விளை போலீசார் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







