முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில், மதுரை, தேனி உட்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இன்று (ஜூலை 1) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். ஜூலை 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

1 ஆம் தேதி முதல் 05 ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

நீட் ஆணையத்தை எதிர்த்து பாஜக வழக்கு!

Ezhilarasan

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Jeba Arul Robinson

தெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்!

Saravana Kumar