முக்கியச் செய்திகள் இந்தியா

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளும், தலைவர்களும்அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழகத்துக்கு போதுமான தடுப்பூசிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“பெரும் தடுப்பூசி இயக்கம் குறித்து பல்வேறு தலைவர்கள் பொறுப்பற்ற தகவல்களை கூறிவருவதை நான் பார்க்கின்றேன். கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவிலும் கூட இது போன்று அரசியல் செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். தடுப்பூசி திட்டத்தில் உண்மை நிலவரம் என்ன என்று தெரிந்தும் கூட இது போன்ற பேசுவது எதிர்பாரத ஒன்றாகும்.

ஜூலை மாத த்துக்கான தடுப்பூசிகள் எப்போது வழங்கப்படும் என்று மாநிலங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத த்துக்காக 12 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் தடுப்பூசி குறித்த குளறுபடிகள் இருந்தால், அவர்களின் தடுப்பூசி திட்டத்தை இன்னும் சரியாக வரையறுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே திட்டமிடுதல், போக்குவரத்து ஆகியவற்றிலும் திட்டமிடுதல் தேவை. மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்கள் தடுப்பூசி குறித்த பீதியை ஏற்படுத்துவதை விடுத்து, தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் கிடைப்பது எப்படி என்பதை திட்டமிட வேண்டும்.”
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்வர்த்தன் கூறி உள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“அதிமுகவில் சாதாரண தொண்டன் முதல் எம்எல்ஏ வரை யாரும் முதல்வராக வரமுடியும்”:முதல்வர் பழனிசாமி

Halley karthi

10நாட்களுக்கு “ஆபரேஷன் பாபகுலி ஒத்திவைப்பு

Vandhana

சிவசங்கர் பாபாவுக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்