முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

பொன்விழா நோக்கும் சென்னையின் அடையாளம்: அண்ணா மேம்பாலத்திற்கு வயது “48”


விக்னேஷ்

கட்டுரையாளர்

சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றா அண்ணா மேம்பாலம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், போக்குவரத்து நெரிசலின்றி செல்ல காரணமாக அமைந்துள்ள இந்த மேம்பாலம். விரைவில் பொன்விழா காண உள்ளது. 1973-ம் ஆண்டு இதே நாளில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தின் வரலாற்றை, சற்று விரிவாக பார்ப்போம். 

1969-ம் ஆண்டு மறைந்த அண்ணாவை பெருமைப்படுத்தும் விதமாக, 1973-ம் ஆண்டு இந்தியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலத்தை சென்னையில் நிறுவி, அதற்கு அண்ணா மேம்பாலம் என பெயர் சூட்டி மகிழ்ந்தார், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த மேம்பாலம், பொன்விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 
சென்னையின் அடையாளம், சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாலம், இந்திய அளவில் மிக நீளமான மேம்பாலம், என அண்ணா மேம்பாலத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

சென்னையில் அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, ஜி.என்,செட்டி சாலை, ஆகிய நான்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த, மேம்பாலம் ஒன்றை நிறுவ, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முடிவெடுத்தார். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலையில், 250 அடி நீளம் 48 அடி அகலத்தில் 66 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பல முன்னணி நிறுவனங்களும், அரசு அலுவலகங்களும் அமைந்துள்ள அண்ணா சாலையில், 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை, 1973-ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி, கருணாநிதி திறந்து வைத்தார்.

 சென்னையின் இதயப்பகுதி என் அழைக்கப்படும் நுங்கம்பாக்கத்தில், அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், அதனுடைய பெருமை என்பது தற்போது வரை நிலைத்து நிற்கிறது. அண்ணா மேம்பாலத்தை மையமாக வைத்து அடையாறு, காந்தி மண்டபம், எழும்பூர் மியூசியம், உள்ளிட்ட 10 இடங்களில், தனது ஆட்சிக் காலத்தில் பெரிய மேம்பாலங்களை கட்டினார் முதலமைச்சர் கருணாநிதி. அப்போது சென்னை மாநகர மேயராக இருந்தவர், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது முதல், நாளொன்றுக்கு பாலத்தின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் சராசரியாக 50 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், இந்த பாலம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்றால், அதற்கு மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

Advertisement:
SHARE

Related posts

பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!

Ezhilarasan

ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தடை செய்துள்ளதா? அமித்ஷா விளக்கம்!

Halley karthi

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம்

Jeba Arul Robinson