முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் நாமக்கல், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சமூக வலைதளத்தில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

Jeba Arul Robinson

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்

Vandhana

“நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்” – அண்ணாமலை

Halley Karthik