முக்கியச் செய்திகள் தமிழகம்

விதிமுறைகளை மீறிய டிடிஎப் வாசன்; காருக்கு அபராதம் விதித்த போலீஸ்

டிடிஎப் வாசன் வந்த காரில் நம்பள் பிளேட் இல்லாததால் விதிமுறைகளை மீறியாதா கூறி காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை கருதிக்கொண்டு அதிவேக பயணம் மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் டி.டி.எப் வாசன் கடலூர் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

Image

இந்த நிலையில் டி.டி.எப் வாசன் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் . இன்று வடபழனியில் உள்ள தியேட்டரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை காண டி.டி.எப் வாசன் வந்துள்ளார். அப்போது அவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார். இதனை கண்டறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர். பின்னர் டி.டி.எப் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது டி.டி.எப் வாசன் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த தகவல் டிடிஎப் வாசனுக்கு தெரியவர, விரைந்து காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு சென்ற டிடிஎப் வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது இந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார். இருப்பினும் அவர் கூறிய காரணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல் – பக்தர்கள் அதிர்ச்சி!

Web Editor

செல்பி எடுக்க மறுத்ததால் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது தாக்குதல்

Web Editor

திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்

G SaravanaKumar