நாகாலாந்தில் சசி தரூர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை பார்வையாளர் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் ஐரோப்பிய நாடான லண்டனில் பிறந்தவர். கல்லூரி படிப்பை டெல்லியிலும் உயர்கல்வியை அமெரிக்காவிலும் படித்தவர். ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய பதவிகளில் இருந்தவர்.
அண்மைச் செய்தி : ’சிறந்த ஊழியர்’ விருது வாங்கியவரை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம்
சசி தரூரின் ஆங்கில புலமை ஆழமானது. அவர் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கென்ற மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அவ்வப்போது சமூக வலைத்தளங்களிம் பெரிதும் அறியப்படாத ஆங்கில வார்த்தைகளை அறிமுகப்படுத்துவார். அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அவரது ரசிகர்கள் தேடி கண்டறிவார்கள்.
தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை கையில் வைத்துள்ளார். நாகாலாந்தில் சசி தரூர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு கையில் இந்த அகராதியுடன் அவர் சென்றுள்ளது தெரியவருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. நேற்று பகிரப்பட்ட இந்த ட்வீட் இதுவரை 2066 பார்வைகளை பெற்றுள்ளது.







