மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய நிர்வாக சீர்திருத்தங்கள், பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற சூழலை வழங்குவதாகவும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அவற்றை செயல்படுத்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்து விரைவில் இறந்தாலோ அல்லது குழந்தை இறந்தாலோ அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் சிறப்பு கொடுப்பனவு கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் குழந்தை பராமரிப்புக்காக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தவிர பாலியல் துன்புறுத்தல் விசாரணை தொடர்பாக சிறப்பு விடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளததுடன், பாதிக்கப்பட்ட பெண் அரசு ஊழியர் 90 நாட்கள் வரை இதற்காக விடுப்பு பெறலாம் என்றும் தெரிவித்தார். இத்தகைய விடுப்பு விசாரணை நிலுவையில் இருக்கும் போது அது வழங்கப்படும் என்று சொன்ன சிங். இந்த விதியின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்பு, விடுப்புக் கணக்கிலிருந்து பற்று வைக்கப்படாது என்றும் தெரிவித்தார் .
மேலும் இப்போதுள்ள 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பில் (CCL) தொடர்ந்து சில புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் குறிப்பாக ஊழியர் CCL இல் இருக்கும்போது விடுப்பு பயணச் சலுகையை வழங்குவதுடன், உரிய அதிகாரிகளிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற்ற பிறகு ஊழியர் வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
அதேபோல் கோவிட் காலத்தில், பல்வேறு அலுவலக குறிப்புகள் மூலம் பெண் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அத்தககைய நேரங்களில் கர்ப்பிணிப் பணியாளர்களுக்குப் வருகை தர வேண்டிய பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, “வீட்டிலிருந்தே வேலை செய்ய” அனுமதிக்கபட்டதாகவும் தெரிவித்தார்.
பிறகு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையில் பெண்களை மையப்படுத்திய சீர்திருத்தங்கள் குறித்து விளக்கிய சிங், விவாகரத்து பெற்ற ஊழியர், பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு விவாகரத்து ஆணை பிறப்பிக்கப்பட்டால், அவர் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடைய நபராக இருப்பார் என்ற சமீபத்திய அலுவலக உத்தரவைக் குறிப்பிட்டார். ஆனால் இதில் பெற்றோர் இறப்பதற்கு முன்பே விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் அவசியம்.
அதன் பிறகு ஏழு ஆண்டுகள் வரை கிடைக்காமலே இருந்தால் ,காணாமல் போன ஊழியர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர ஏழு ஆண்டுகள் பணி முடிவதற்குள் அரசு ஊழியர் இறந்தாலும், முதல் 10 ஆண்டுகளுக்கு கடைசி ஊதியத்தில் 50 சதவீதமும், அதன் பிறகு கடைசி ஊதியத்தில் 30 சதவீதமும் உயர்த்தப்பட்ட விகிதத்தில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.இதேபோல், NPS இன் கீழ் காணாமல் போன ஊழியர்களின் குடும்பங்கள் இப்போது FIR பதிவு செய்த 6 மாதங்களுக்குள் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறலாம் மற்றும் ஊழியர் இறந்துவிட்டதாகக் கருதப்படும் 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டாம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாக மத்திய அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.