2023- ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மகளிருக்கான ஓபன் டென்னிஸ் போட்டிகள் மற்றும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டிகள் என்று இருவேறு பிரிவுகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி மகளிருக்கான ஒபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி வெகு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. ஒரு வாரம் நடந்த இப்போட்டியில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆடவர் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. ATP சேலஞ்சர்ஸ் 100 பள்ளிகளுக்கான டென்னிஸ் தொடர் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ATP சேலஞ்சர்ஸ் தொடர் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.