பட்டாசு தீவிபத்தில் உயிரிழந்த தாத்தா, 2 பேரன்கள் !

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி அருகேயுள்ள…

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவருடைய 2 பேரன்கள் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி அருகேயுள்ள லத்தேரி பேருந்து நிலையம் அருகில், மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. அங்கு பட்டாசு வாங்கிய இரண்டு பேர் அதை வெடித்தபோது, கடைக்குள் தீப்பொறி தவறி விழுந்தது. இதனால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் கடை உரிமையாளர் மோகன் அவருடைய பேரன்களான தனுஷ் மற்றும் தேஜஸ் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலாயின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து லத்தேரி காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.