பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் இன்று முதலே கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகமான வசூலை குவித்து வெற்றி பெறப்போவது வாரிசா? துணிவா? என்று தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் விஜய் – அஜித் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து ஒட்டியுள்ள போஸ்டர்கள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ’ஒற்றுமையே வெற்றி’ என்ற தலைப்புடன் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், ’வாரிசு/ துணிவுனு அடிச்சுக்காம, துணிவோடு வாரிசை கொண்டாடுங்க நண்பா’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்புக்கும் பாதகமில்லாத வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.
சிவகங்கையில், வாரிசு மற்றும் துணிவு படங்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தேங்காய்களை உடைத்து இரு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாரிசு படம் விஜய்யின் 66வது படம் என்பதால், வாரிசு பட பேனருக்கு 66 தேங்காய்களையும், துணிவு படம் அஜித்தின் 61வது படம் என்பதால், துணிவு பட பேனருக்கு 61 தேங்காய்களையும் ரசிகர்கள் உடைத்து கொண்டாடினர்.