சென்னையில் ஜூன் மாதத்தில் 295 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது.
அதிக அளவாக மீனம்பாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 280 மழை பதிவானது. சென்னையில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 4 செ.மீ. என்றும் ஆனால் 16 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், இது சுமார் 295 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு சராசரியாக 3.5 சதவிகிதம் பெய்ய வேண்டிய நிலையில், 3.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 463 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






