கொரோனா உச்சத்தில் தேர்வுகள் நடத்துவது பொறுப்பற்ற செயல்: பிரியங்கா காந்தி!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சிபிஎஸ்இ இயக்குநரகம் மாணவர்களுக்கு 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் நடைத்துவது பொறுப்பற்ற செயல் என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். சிபிஎஸ்இ…

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சிபிஎஸ்இ இயக்குநரகம் மாணவர்களுக்கு 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் நடைத்துவது பொறுப்பற்ற செயல் என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 4 முதல் ஜூன் 7-ம் தேதிவரை பொது தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


கொரோனா காரணமாக பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் முறையாக இயங்காத காரணத்தால் ஏராளமான மாணவர்கள் வீட்டிலிருந்தே படித்துவருகிறார்கள். இந்நிலையில் பொது தேர்வ எதிர்கொள்ளும் அளவுக்கு மாணவர்கள் தயாராகாத காரணத்தால் தேர்வு பயம் காரணமாக சுமார் ஒரு லட்சம் சிபிஎஸ்இ மாணவர்கள் பொது தேர்வை ரத்து செய்ய கோரி “cancelboardexams2021” என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் “கொரோனா உச்சத்தில் இருக்கும் போது சிபிஎஸ்இ இயக்குநரகம் பொது தேர்வு எழுத அனுமதித்திருப்பது பொறுப்பற்ற செயல் என விமர்சனம் செய்துள்ளார். மேலும் சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நேரில் எழுத கட்டாயப்படுத்தக் கூடாது. தேர்வுகளை ரத்து செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலம் தேர்வுகளை எழுதுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நாட்டில் தேர்வு முறையை முழுமையாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், உணர்வுப் பூர்வமாக மாணவர்களை அணுக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி பொது தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எழுதவேண்டும் என மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.