போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என அழைப்பது பெரிய குற்றம், என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்து, அவர் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரான குற்றம் என விமர்சித்தார். அவை, நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை, தீவிரவாதிகள் என்று அழைப்பது, போராட்டங்களை அரசியல் சதி என, மத்திய அரசு கூறுவதும் அதைவிட பெரிய குற்றம், என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.







