டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா மீது சிபிஐ மேலும் ஒரு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மனீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தனர். மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற அனுமதியுடன் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மைச் செய்தி:அதானி விவகாரத்தால் அரசுக்கும், பிரதமருக்கும் அச்சம் – ராகுல் காந்தி
இந்நிலையில் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 7 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நேர்மையற்ற முறையில் சொத்துக்குவிப்பு, குற்றச்சதி, ஏமாற்றும் நோக்கத்துக்காக் போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்களை பயன்படுத்துதல், குற்றவியல் முறைகேடு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.







