மர்ம கடிதத்தால் கருத்து சொன்ன ”கடவுளின் தோழன்”

கும்மிருட்டில் செல்போனில் டார்ச் அடித்து, எதையோ படித்துக்கொண்டே வயிறுகுலுங்க சிரிக்கும் இவர்கள் வேறு யாருமில்ல அரக்கோணம் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் தான்… ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்…

கும்மிருட்டில் செல்போனில் டார்ச் அடித்து, எதையோ படித்துக்கொண்டே வயிறுகுலுங்க சிரிக்கும் இவர்கள் வேறு யாருமில்ல அரக்கோணம் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் தான்…

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உள்ளே என்ன இருக்கிறது என தெரியாததால், ரயில்வே ஊழியர் அரக்கோணம் ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே அங்கு வந்து அந்த பெட்டி அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அதுகுறித்த விவரங்கள் ஏதும் தெரியவராததால் அந்த பெட்டியை திறப்பதற்காக ரயில் நிலையத்திற்கு வெளியே எடுத்துச் சென்றனர்.

பதற்றத்துடன் பெட்டியை திறந்து பார்த்த போலீசார், அதனுள்ளே சில உடைந்த டைல்ஸ் துண்டுகளும், ஒரு கடிதமும் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடிதத்தில் “அடுத்தவரின் பொருட்களை திருடுபவர்கள் மானங்கெட்டவர்கள், இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள். இப்படிக்கு கடவுளின் தோழன்” என்று எழுதப்பட்டிருந்ததை படித்த போலீசார் குபுக்கென்று சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்.

பரபரப்பாக காணப்படும் அரக்கோணம் ரயில் நிலையத்தினுள் மர்ம பெட்டியை வைத்து பீதியை கிளப்பிவிட்டு, இறுதியில் கடிதம் வாயிலாக கருத்து கூறிய கடவுளின் தோழன் யார் என்பது இன்னும் விடைதெரியா புதிராகவே உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.