இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

டெல்லியில் இன்று காவிடி மேலாண்ஐ ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.

அதன்படி அகடந்த கடந்த நவ.20-=ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கர்நாடகம் தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக்கூட்டம் கூடுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.