53 பந்துகளில் 204 ரன்கள் : வரலாறு படைத்த 15 வயதேயான சூர்யவன்ஷி!

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன்கள் விளாசி புதிய சாதனைகளைப் படைத்தார்.

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 15 வயதான இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 53 பந்துகளில் 204 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

தோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான தொடக்கத்தை அளித்தார். வெறும் 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்த அவர், 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசினார். அவரது அதிரடியால் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த இன்னிங்ஸ் மூலம் பட்டியல் ஏ (List A) கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் அதிவேக இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனைகளை வைபவ் படைத்ததார்.

இந்த சாதனையை படைதத அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ரோகித் சர்மா, ருதுராஜ் சாதனை

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்தனர். தற்போது 28 சிக்ஸர்கள் அடித்த வைபவ் இருவரையும் முந்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த இளம் வீரர்

இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் திறமையான வீரர்களில் ஒருவராக வைபவ் சூர்யவன்ஷி கவனம் பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான அவர், இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் நீண்டகாலமாகத் தக்கவைத்திருந்த சாதனையை முறியடித்தார்.

கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 35 பந்துகளில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்ததன் மூலம், இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கான வாய்ப்பையும் பெற்றார்.

ஐபிஎல் தொடல் தனது திறமையை நிரூபித்த வைபவ், அதிக ரன்கள் எடுத்த வீரராகத் தொடரை நிறைவு செய்தார். மேலும், ஒரே தொடரில் 72 சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையையும் படைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.