காவிரி விவகாரம்: “அனைத்துக் கட்சிகள் கூட்டம் தேவையில்லை!” – அமைச்சர் நிர்மல் குமார்

தவெக அரசு தண்ணீரை கொண்டுவந்துவிடக் கூடாது என இங்குள்ள கட்சிகள் உறுதியாக இருக்கின்றன எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஆகஸ்ட் 3 ஆம் தேதி காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் ஒப்புதலோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. காவிரி நீர் கொடுக்க கூடாது என்பது கர்நாடக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் விஜய் எல்லா வகையிலும் ஆலோசித்து வருகிறார்.

முதலமைச்சர் விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகாவுக்கு செல்லவில்லை. காவிரி நீர் திறப்பு மற்றும், மேகதாது அணி விவகாரம் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால் தமிழ்நாட்டிற்கு தவெக அரசு தண்ணீரை கொண்டுவந்துவிடக் கூடாது என்று இங்குள்ள கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. இவர்கள் தமிழகத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். எனவே அனைத்துக் கட்சிகள் கூட்டம் தேவையில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.