தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியின்
கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர்.
லிப்ரா புரொடக்ஷன் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.
இவர் கடந்தாண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானார்.
இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகரன் மீது அமெரிக்கா வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆன்லைன் மூலம் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
விஜயிடம் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி 20
லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த விஜய்,
என்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் தான் இருக்கிறது. அதை தான் இரண்டு தவணையாக அனுப்புவதாக கூறி முதலில் 10 லட்சமும், அடுத்த நாள் 5 லட்சம் பணத்தை ரவீந்தர் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். 1
5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட ரவீந்தர் கடன் தொகையை பல முறை கேட்டும் அவர் திருப்பித்தராமல் மோசடி செய்து வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் விஜய் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகி அவரிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







