டிஎன்எல் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நெல்லை ராயல் கிங்ஸ்அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணி சார்பில் அதிகபட்சமாக சிவம் சிங் 46 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். சோனு யாதவ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் பி கஜேந்திரன் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கார்த்திக் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த டிஎன்பிஎல் சீசனில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அஜித், இந்த ஆட்டத்திலும் தனது முத்திரையை பதித்தார். தொடர்ந்து மூன்றாவது அரை சதத்தை அவர் பதிவு செய்தார்.
சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டது. திண்டுக்கல் அணியின் சார்பில் 19 வது
ஓவரை ஜி கிஷோர் வீசிய நிலையில், அந்த ஓவரில் ஈஸ்வரன் தொடர்ச்சியாக மூன்று
சிக்சர்களை பறக்க விட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார் அதேபோல் அஜித் தேசம்
தனது பங்கிற்கு சிக்சஸர்களை பறக்க விட 19வது ஓவரில் மட்டும் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 33 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு நான்கு ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில், திண்டுக்கல் அணியின் பந்துவீச்சாளர் சுபோர்த் சிறப்பாக பந்து வீசியதால் கடைசி பந்து வரை ஆட்டம் சென்றது.
இறுதிப்பந்தில் ரித்திக் ஈஸ்வரன் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் வரும் 12ஆம் தேதி திருநெல்வேலியின் நடைபெறும் போட்டியில் கோவை அணியை எதிர்கொள்கிறது.







