முக்கியச் செய்திகள் தமிழகம்

தேவாலய சிலை உடைப்பு: சிறுவன் உள்பட இருவர் கைது

கோவை அருகே தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை உடைத்த இந்து முன்னணியச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை-திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் வழிபடும் தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த 23-ஆம் தேதி ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணப்பட்ட இந்த தேவாலயத்தில், இரவு 10 மணி அளவில் தேவாலய வளாகத்தில் உள்ள கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் கேட்டு பாதுகாவலர் ஜான்சன், சென்று பார்த்த போது, தலைகவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர், தேவாலயத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த புனித செபாஸ்டியரின் சிலையை உடைத்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைத்து கூச்சலிட்டுள்ளார். பாதுகாவலரின் சத்தம் கேட்டு மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் இருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றார்.

அண்மைச் செய்தி: பிப். 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

இதில் செபாஸ்டியர் சிலை மற்றும் அதனைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. புகாரையடுத்து, வழக்கு பதிந்த ராமநாதபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், சிலையை உடைத்தது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான் என கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான இரண்டு பேரை தேடிவருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

மக்களை பற்றியும் இறைவனை பற்றியும் அறியாத ஒரு நபர் கமல் – எம்.எல்.ஏ விஜய தரணி தாக்கு!

Gayathri Venkatesan

பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்யலாமா?

Saravana Kumar

ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

Halley Karthik