முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

தீபாவளிக்கு அறிமுகமாகும் ஜியோவின் புதிய ஸ்மார்ட்போன் – சுந்தர் பிச்சை தகவல்

கூகுல் நிறுவனத்துடன் இணைந்து ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை தீபாவளிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் பிரகதி OS இல் இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் மாற்றத்திற்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் பார்க்கப்படுகிறது என்று முதலீட்டாளர்களுக்கு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அதேபோல், ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கான மாற்றத்தை இது முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிடுள்ளார்.

ஃபீச்சர் போன்களில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாற விரும்பும் மக்களுக்கான தேவையை அறிந்து இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அனைத்து அம்சங்களுடனும் வெளிவரும் என்று சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் பற்றிய குறும்படம் ஒன்று வெளியானது. அதில் ஜியோ போனின் தயாரிப்பு எப்படி நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருந்தது. இந்த போன் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் பிரகதி ஓஎஸ் மற்றும் குவால்காம் ப்ராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் என்பதனையும் முக்கியத்துவம் கொடுத்து காட்டப்பட்டு இருந்தது. அதாவது, திருப்பதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்கிற விவரங்களையும் அந்த வீடியோவிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆன்லைனில் ஏற்கனவே கசிந்த தகவலின்படி, ஜியோபோன் நெக்ஸ்ட் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் எச்டி ப்ளஸ் 1440 x 720-பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. 320 டிபிஐ திரை அடர்த்தி மற்றும் 18:9 விகிதத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குவால்காம் 215 சிப்செட் இவற்றுள் இருக்கும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன் ஸ்க்ரீன் மொழிபெயர்ப்பு, வாய்ஸ் அசிஸ்டண்ட், ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களைகொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட். இந்த போனில் 13 எம்பி கேமரா இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பிகள் மற்றும் வீடியோகால் வசதிக்கு என 8 மெகாபிக்சல் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம்/16ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம்/32ஜிபி மெமரி ஆரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்

Halley karthi

செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம்

Gayathri Venkatesan

தாடி ரகசியம், காதல், திருமணம்: மனம் திறக்கிறார் பிரபுதேவா

Ezhilarasan