இஷான், சூர்யகுமார் விளாசியும் முடியல.. வெளியேறியது மும்பை

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத்…

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத் அணி யும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது.

இதனால், மும்பை வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர். இஷான் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் மிரட்டினார். ஐதராபாத் வீரர்களின் பந்துவீச்சை பந்தாடி னார். இதனால், ஸ்கோர் ஜிவ்வென ஏறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். சூர்ய குமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். 236-ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியும் பேட்டிங்கில் மிரட்டியது. இருந்தாலும் அந்த அணியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தோல்வியை தழுவியது.

அந்த அணியில் அதிகப்பட்சமாக மணிஷ் பாண்டே 41 பந்துகளில் 69 ரன்களும் ஜேசன் ராய் 21 பந்துகளில் 34 ரன்களும் விளாசினர். இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றாலும் அடுத்தச் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.