ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!

ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை…

ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி என்பதை வலியுறுத்தி பாஜகவைச் சார்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கில்  மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஊரின் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வி வாரியம் மற்றும் பாடத்திட்டம் சாத்தியமில்லை. உள்ளூர் வளங்கள், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு தேசிய கட்டமைப்பு பாடத்திட்டத்துக்கு அவசியமாகிறது” என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அதேபோல “ஒரு குழந்தைக்கு பள்ளிக்கு வெளியே பரந்துள்ள வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், வேறுபட்ட பின்னணியை கொண்ட மக்களுக்கு ஒரே பாடத்திட்டம் சாத்தியமில்லை” எனவும் சிபிஎஸ்இ தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் சாத்தியமில்லாதது என சிபிஎஸ்இ வாரியம்  தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.