”நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் பாரபட்சமின்றி நடவடிக்கை” – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி

”நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் பாரபட்சமின்றி நடவடிக்கை” என  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தொடர்­பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் தி.மு.க. மாவட்­டச் செய­லா­ளர்­கள், தொகுதிப் பார்­வை­யா­ளர்­கள்…

”நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் பாரபட்சமின்றி நடவடிக்கை” என  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தொடர்­பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் தி.மு.க. மாவட்­டச் செய­லா­ளர்­கள், தொகுதிப் பார்­வை­யா­ளர்­கள் கூட்­டம் காணொலி வாயி­லாக காலை 10:30 மணிக்கு நடை­பெ­ற்றது.  மண்­டல வாரி­யாக வாக்­குச்­சா­வடி முக­வர்­கள் கூட்­டங்­கள் தி.மு.க. சார்­பில் நடத்­தப்­பட்டு வரு­கி­றது.  வாக்­குச்­சா­வடி முக­வர்­கள் எப்­படி செயல்­பட வேண்­டும், தி.மு.க.வின் திட்­டங்­களை பொது­மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும் என அறிவுறுத்தப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது..

” விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாக காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் பணி நம்மை எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றது

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்.

தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.