கோவை: கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலி

கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. கோவை வடவள்ளியைச் சேர்ந்த…

கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஆதேஷ் என்ற கல்லூரி மாணவ,ர் தனது நண்பர்கள் ரோஷன், ரவிகிருஷ்ணன், நந்தனன் ஆகியோருடன் பூலுவப்பட்டியில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார். இரவு அங்கேயே தங்கிய மாணவர்கள், கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதிகாலையில் காரில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.

4 பேரும் வடவள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தபோது தென்னமநல்லூர் கரியகாளியம்மன் கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மாணவர் ரோஷனை மட்டும் உயிருடன் மீட்டனர்.

இதனை தொடர்ந்து, 6 மணி போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்த மாணவர்கள் ரவி கிருஷ்ணன், ஆதேஷ், நந்தனன் ஆகியோரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். 3 பேரின் சடலங்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கிணற்றில் விழுந்த காரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.